Current affairs october

இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டறிந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசை அலைகளின் இருப்பை உறுதி செய்ததுக்காக ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வைஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பேரி சி.போரிஸ் மற்றும் கிப்.எஸ்.த்ரோன் ஆகியோருக்கு 2017-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ரெய்னர் வைஸுக்குப் பரிசுத் தொகையில் பாதியும், மற்ற இருவர்களுக்குப் பாதியும் பிரித்து வழங்கப்படும் என்று நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ எனும் ஈர்ப்புவிசை ஆய்வகம் முதல்முறையாக பிரபஞ்சத்திலிருந்து வெளியான ஈர்ப்புவிசை அலைகளை உணர்ந்தது. இந்த ஈர்ப்புவிசையானது பிரபஞ்சத்தில் உள்ள இரு கருந்துளைகள் மோதியதால் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கு வந்தபோது மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறினர்.

label,

About the author

Add a Comment